தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் கோவை ஆகிய மாவட்டங்களில் தினம் தினம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படவாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
 
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணருடன் ஆலோசனை செய்கிறார். இந்த ஆலோசனையின் போது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது எனவே கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தலைமைச்செயலக வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்