ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே வீட்டின் முன்பு மரத்தில் கட்டி வைத்திருந்த ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த பல்ல மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் வயது 46 இவர் நேற்று இரவு தன்னுடைய ஆட்டை வீட்டின் வெளியே உள்ள மரத்தில் கட்டிவிட்டு திண்ணையில் உறங்கியுள்ளார். 

மறுநாள் காலை எழுந்து அவர் பார்த்தபோது மரத்தில் கட்டியிருந்த ஆடுகள் காணமல் போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அருகிலிருந்தவர் களிடம் ஆடுகள்காணாமல்போனதுகுறித்து கேட்டார் ஆனால் பலன் ஏதும் கிடைக்காததால் சக்திவேல், ஆடு திருடுபோனது குறித்து பாணாவரம் போலீஸில்புகார்அளித்தார்.

புகாரின் பேரில்
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அதே கிராமத்தை சேர்ந்த ரஜினி என்கிற ஜானி 45 , டில்லி பாபு 25 ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.