ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல் நெல்லி கிராமத்தில் மழைக் காலங்களில் அதிகமாக பாதிக்கப்படும் இடங்களான ஏரி, ஓடை, கலங்கல் பகுதி, ஏரியில் இருந்து தண்ணீர் வரும் முக்கிய சாலைகள் உள்ளிட்ட பகுதிகளை உதவி ஆணையாளர் (கலால்) சத்தியபிரதாப் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். 

அப்போது, நீர்நிலை கரைகளின் ஓரம் உள்ள வீடுகளில் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் பொது மக்களை தங்க வைக்கும் இடம் உள்ளிட்டவையும் ஆய்வு செய்தார். 

ஆய்வின்போது தாசில்தார் நடரா ஜன், ஆர்ஐக்கள் வினோத்குமார், சுப்பிரமணி, விஏஓ சிவராஜ் மற்றும் கிராம உதவியாளர்கள் உட்பட பலர் இருந்தனர்.