ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற 20 21 ஆம் தேதி ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவத்தினருக்கு காவல்துறையினர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

அதன்படி, இந்த மாவட்டத்திலேயே வசித்து வரும் 2091 முன்னாள் ராணுவத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ரா.சிவகுமார் ராணுவ வீரர்கள் தியாகத்தைப் போற்றும் வகையில் கவிதை வடிவில் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்தக் கவிதையினை உங்க வாங்க அவர்களுக்கு எளிதாகக் கிடைக்கும் வகையில் வாலாஜாவில் உள்ள முன்னாள் ராணுவத்திற்கான கேன்டீனில் நேற்று காவல் கண்காணிப்பாளர் கேன்டீன் நிர்வாகத்திடம் நேரில் சென்று சந்தித்து அந்தக் கடிதங்களை வழங்கினார்.

இதேபோல், மாவட்டம் முழுவதும் அந்தக் கடிதங்கள் முன்னாள் ராணுவத்தினர் வசிக்கும் இருப்பிடத்திற்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது.