ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் காப்புக்காட்டில் இருந்து மூன்று வயதான புள்ளிமான் ஒனறு தண்ணீர் தேடி செங்கல்நத்தம் கிராமத்திற்குள் வந்தது.

மானைக் கண்ட நாய்கள் துரத்தியது. பயந்த புள்ளிமான் நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடியது. ஈஸ்வரன் என்பவரது 60அடி ஆளமுள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது, உயிருக்கு போராடி தண்ணீரில் புள்ளிமான் தத்தளித்தது. 

இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணிநேரம் போராடி புள்ளி மானை உயிருடன் மீட்டனர். 

பின்னர் அந்த மானை வனத்துறை ரேஞ்சர் கந்தசாமியிடம் ஒப்படைத்தனர். கந்தசாமி புள்ளிமானை அம்மூர் காப்பு காட்டில் விட்டார்.