புத்தாண்டு பிறந்த நிமிடத்தில் வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உட்பட அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 48 குழந்தைகள் பிறந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆங்கில புத்தாண்டு 2021 பிறந்த நாளன்று நள்ளிரவு 12 மணி தொடங்கி 5 நிமிடங்களுக்குள் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 16 குழந்தைகள் பிறந்தன . புத்தாண்டு பிறந்த நிமிடத்தில் பிறந்ததால் இக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு டீன் செல்வி மற்றும் மருத்துவர்கள் , செவிலியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல் வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் 10 குழந்தைகள் புத்தாண்டு பிறந்த நிமிடத்தில் பிறந்தன. அதன்படி வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 26 குழந்தைகள் பிறந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .

இதில் மாநகராட்சி சுகாதார மையங்களிலும் , வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையிலும் புத்தாண்டு பிறந்த நள்ளிரவு 12 மணி தொடங்கி அதிகாலை வரை குழந்தை பிறந்ததாக தகவல் இல்லை . மேலும் திருப்பத்தூர் மாவட்டத் தில் 7 குழந்தைகளும் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 குழந்தைகளும் என மொத்தம் 22 குழந்தை கள் பிறந்ததாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .