ராணிப்பேட்டை: பாரதி நகரில் ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், வேலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த ஆண்டு பிரிக்கப்பட்ட பிறகு தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான மாவட்ட அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக தீயணைப்பு துறை மற்றும் மீட்பு துறையின் மாவட்ட அலுவலர் அலுவலகம் பாரதி நகரில் இன்று திறக்கப்பட்டது. 

சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இவ்வலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார், இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.