ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வேல்முருகன், சென்னை பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சி நான்காவது மண்டல சுகாதார அலுவலர் வீராசாமி ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் வீராசாமி ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனராக பொறுப்பு ஏற்று அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.