தனுஷ் ரயில் மோதி பலி:

சோளிங்கர் அடுத்த குளத்தேரி பகுதியைச் சேர்ந்த தனுஷ் (வயது 21) என்ற கூலித்தொழிலாளி, தலங்கை- வாலாஜா ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அதிவேகமாக சென்ற ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளத்தை கடப்பது மிகவும் ஆபத்தானது. ரயில்வே தண்டவாளத்தை கடக்க வேண்டியது இருந்தால், அங்கிருக்கும் லெவல் கிராசிங் அல்லது மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும்.