அரக்கோணம் அருகே மனைவி கணவரை கடித்த சம்பவம்:
அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நாரணமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவிக்கும் வெங்கடேசனுக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்தது.
இன்று, வழக்கம்போல தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த வெங்கடேசனின் மனைவி, அவரை கை, தொடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடித்தார். கடுமையான காயமடைந்த வெங்கடேசன், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை கடித்ததற்கான காரணம் குறித்து மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.