ஆற்காடு:ஆற்காடு கோ. வரதராஜிலு செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.

பள்ளியின் செயலாளர் ஜி. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கிய விழாவில், துணைத்தலைவர் பி. என். பக்தவச்சலம், பொருளாளர் நந்தகுமார், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பரமசிவம், பி. எஸ். சரவணன், கிஷோர்குமார், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை எம். சாந்தி வரவேற்புரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. ஜே. எல். ஈஸ்வரப்பன் 367 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். நகர தி.மு.க. செயலாளர் ஏ. வி. சரவணன், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில் வழங்கப்பட்ட சைக்கிள்கள் மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.