காவேரிப்பாக்கம்: 23 வயது இளைஞர் பரிதாப பலி
கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்வேடு கிராமத்தை சேர்ந்தவர் மாலிக்ஜான் (23). இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை இறக்கி விட்டு நேற்று முன்தினம் இரவு லோடு ஆட்டோவில் பெங்களூர், சென்றார்.

காவேரிப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலை யில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது லோடு ஆட்டோ மோதியதில் மாலிக்ஜான் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், பழுதாகி நின்றிருந்த லாரி மீது லோடு ஆட்டோ டிரைவர் தூக்கக் கண்ணிலேயே மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் காவேரிப்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.