வாலாஜாபேட்டையில் இன்ஜினியரிங் பட்டதாரி கிணற்றில் விழுந்து பலி
வாலாஜாபேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் கோதண்டராமன் மகன் ஹேமச்சந்திரன் (24) என்பவர், நேற்று காலை 11 மணி அளவில் காலைக்கடன் முடித்து வீட்டு அருகில் உள்ள தென்கணப்பந்தல் மணவாளன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் கை, கால்களை கழுவுவதற்காக இறங்கியுள்ளார். அப்போது கால்தவறி கிணற்றில் விழுந்து இறந்தார்.

இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹேமச்சந்திரன் இன்ஜினியரிங் படித்துவிட்டு வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் வேலை செய்து வந்துள்ளார். இவரது மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹேமச்சந்திரனின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும் அவரது இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.