நெமிலி தாலுகா பனப்பாக்கத்தில் இருந்து பள்ளூர் செல்லும் சாலையில் எஸ். கொளத்தூர் என்ற இடத்தில் தக்காளி லோடு ஏற்றி சென்ற வேன் இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் எதிரே ஓடிய மாட்டின் கயிறு வேனின் முன்பக்கத்தில் சிக்கியது. இதனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் ரமேஷ் குமார் தலையில் கடுமையான காயம் அடைந்து படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.