ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் வீடு வீடாக வழங்கப்பட்டது. இந்தப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

டோக்கன்களில் பொங்கல் பரிசு தொகுப்பில் அடங்கியுள்ள பொருட்களின் பட்டியல், நியாய விலைக் கடைக்கு செல்ல வேண்டிய தேதி மற்றும் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன.

வட்ட ஆட்சியர் வளர்மதி பொதுமக்களிடம் பேசுகையில், "பொங்கல் பண்டிகை அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியளிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அனைத்து பொதுமக்களுக்கும் இலவசமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் தவறாமல் நியாய விலை கடைக்கு சென்று பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தினார்.