ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த பிஞ்சு பகுதியில் உள்ள ஏரியினை பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சமாக மாற்றி சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். இதில், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர். வினோத்காந்தி நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
இந்த பணிக்காக ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் ஏரியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஏரியின் நீர்நிலை மேம்படுத்தப்படும். ஏரியில் படகு சவாரி, மீன்பிடித்தல், பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இந்த சீரமைப்பு பணி நிறைவடைந்தால், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு புதிய பொழுதுபோக்கு அம்சம் கிடைக்கும்.