ராணிப்பேட்டையில் பொங்கல் கொண்டாட்டம்
இந்த வருடம் பொங்கல் பண்டிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை போகிப்பண்டிகையுடன் துவங்கியது. தொடர்ந்து விடுமுறையுடன் பொங்கல் பண்டிகை இந்த வருடம் இருப்பதால் கொண்டாட்டம் களைகட்டியது. ராணிப்பேட்டை பஜ பஜார் வீதி, முத்துக்கடை, நவல்பூர், எம்.எப்.சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட், கிருஷ்ணகிரி சாலை, ராஜேஸ்வரி தியேட்டர் ரவுண்டானா ஆகிய இடங்களில் தாற்காலிக கடைகள் போடப்பட்டு பொங்கல் பண்டிகை சம்பந்தமான பொருட்கள் விற்கப்பட்டது. வண்ணக்கோலப்பொடிகள், கரும்பு, மஞ்சள் ஆகிய பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
பெரிய ஜவுளிகளில் மட்டும்தான் விற்பனை என்றில்லாமல் சாலையோர துணிக்கடைகளிலும் மக்கள் கூடி அதிக அளவில் புதுத்துணிகள் வாங்கிக்சென்றனர். காலணிகள், சிறுவர்களுக்கான பொம்மை போன்ற பொருட்களும் விற்பனையானது.
பண்டிகை நாளான இன்று, பொங்கல் வைக்க மக்கள் குடும்பத்துடன் வழிபாடு நடத்தினர். பின்னர், பொங்கல் வைத்து குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்த பொங்கல் பண்டிகை அனைவருக்கும் இனிய பொங்கல்!