நார்ச்சத்து நிறைந்த சத்து நிறைந்த கருப்பு கவுனி அரிசி லட்டுசெய்வது எப்படி

தேவையான பொருட்கள்


பொருள் அளவு
கருப்பு கவுனி அரிசி 1 கப்
தேங்காய் துருவல் 1 கப்
வெல்லம் பொடித்தது 3/4 கப்
வறுத்த வேர்க்கடலை 1 கப்
ஏலக்காய் 5
முந்திரி 10
நெய் 2 ஸ்பூன்

செய்முறை

1. முதலில் கருப்பு கவுனி அரிசியை குறைந்தது 5 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். இரவு முழுவதும் கூட ஊற வைக்கலாம். பிறகு அதை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவ வேண்டும். கழுவிய இந்த அரிசியை காட்டன் துணியை விரித்து அதில் போட்டு நன்றாக நிழலில் காய வைக்க வேண்டும். அரிசி காய்ந்த பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி அரிசியை போட்டு நன்றாக வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.

2. குறைந்தது ஐந்து நிமிடம் ஆவது வறுக்க வேண்டும். வறுத்த இந்த அரிசியை ஒரு தட்டில் போட்டு ஆற வைத்து விட வேண்டும். அடுத்ததாக மறுபடியும் அதே கடாயில் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி தேங்காய் துருவலை போட்டு அது நன்றாக சிவக்கும் வரை வருக்க வேண்டும். சிவந்த பிறகு அதையும் ஒரு தட்டில் போட்டு ஆற வைத்து விட வேண்டும்.

3. இவை இரண்டும் நன்றாக ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் அரிசியை போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய் துருவளையும் சேர்த்து அரைக்க வேண்டும். அடுத்ததாக ஏலக்காய், தோல் நீக்கப்பட்ட வருத்த வேர்க்கடலை இவை இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்றாக அரைந்த பிறகு இதில் வெல்லத்தைப் போட்டு ஒருமுறை மட்டும் பல்ஸ் மோடில் வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

4. அரைத்த இந்த மாவை ஒரு பவுலில் சேர்த்து விருப்பத்திற்கு ஏற்ப முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை உருண்டையாக பிடித்து வைத்து விட வேண்டும். மிகவும் ஆரோக்கியமான கவுனி அரிசி லட்டு தயாராகிவிட்டது.

குறிப்புகள்


  • கவுனி அரிசி லட்டு செய்வதற்கு முன்பு அரிசியை நன்றாக ஊற வைக்க வேண்டும். அப்போது தான் அரிசியின் சத்துக்கள் முழுவதும் லட்டுவில் சேரும்.
  • வெல்லத்தை அதிகமாக சேர்த்தால் லட்டு கடினமாக இருக்கும். அதே நேரத்தில் வெல்லத்தை குறைவாக சேர்த்தால் லட்டு இனிக்காமல் இருக்கும்.
  • விருப்பத்திற்கு ஏற்ப வேறு ஏதாவது பருப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சத்துக்கள்


கருப்பு கவுனி அரிசி லட்டில் அதிக அளவு நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

  • நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.
  • வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கின்றன.

கருப்பு கவுனி அரிசி லட்டு தினமும் ஒரு லட்டு வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.