ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பில்லாஞ்சி, திடீர் நகரை சேர்ந்தவர் சங்கர் (40). இவரது மகள் பிரியா (15). இவர்கள் நேற்று புத்தாண்டை ஒட்டி, கோவிலுக்கு செல்வதற்காக, தங்களின் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர்.
அப்போது, ஸ்ரீகாளிகாபுரத்தில் இருந்து வேகமாக வந்த, மாருதி ஸ்விப்ட் கார், இவர்கள் மீது மோதியது. காயமடைந்த இருவரும் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில், பிரியா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயம் அடைந்துள்ள சங்கர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பகுதிவாசிகள் சோளிங்கர் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். சோளிங்கர் போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.