வாலாஜா தாலுகா சுமைதாங்கி கிராமம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஜெயபாலன் (35). இவர் அங்கு கிளினிக் தொடங்கி, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார். இவர் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி வந்தது பொதுமக்களுக்கு தெரிய வந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் மருத்துவ துறை மற்றும் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் மருத்துவ துறை மற்றும் காவேரிப்பாக்கம் போலீசார் ஜெயபாலை விசாரித்தனர். விசாரணையில் அவர் போலி மருத்துவர் என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, ஜெயபாலை போலி மருத்துவர் சட்டத்தின் கீழ் கைது செய்து, காவேரிப்பாக்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவிட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்திய ஜெயபாலன் கைது செய்யப்பட்டது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.