ஆற்காடு அடுத்த விளாபாக்கம் கிராமத்தில் இன்று மின்கம்பி அறுந்து விழுந்து கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு ஏக்கர் அளவுக்கு கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது.
கருணாகரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் அவரது நிலத்தின் மேலே சென்ற உயிர் அழுத்த மின் கம்பி இன்று திடீரென அறுந்து விழுந்தது. இதனால் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது.
தீப்பிடித்தது கண்டு அதிர்ச்சி அடைந்த கருணாகரன், உடனே இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ வேகமாக பரவி ஒரு ஏக்கர் அளவுக்கு கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது.
தீயை அணைத்த பின்னர் தீயணைப்புத் துறையினர் கருணாகரனை சந்தித்து விசாரணை நடத்தினர். மின் கம்பி ஏன் அறுந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்து காரணமாக கருணாகரனுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு கணிசமாகும்.