ராணிப்பேட்டையில் விவசாயி கிணற்றில் விழுந்து பலி

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஏரிமண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கம் (57). இவர் விவசாயி. தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் பைப் லைனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் வழுக்கி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், கிணற்று நீர் அதிகமாக இருந்ததால் மீட்க முடியவில்லை. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கிணற்றில் இறங்கி பொன்னுரங்கத்தை மீட்டனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.