சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் ராஜேஷ் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (42). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளி. இவரது மனைவி ஜானகி.

செல்வராஜ் குடும்ப செலவிற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்தார். இந்த கடன் பிரச்சனையால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த செல்வராஜ், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், செல்வராஜ் குடும்ப செலவிற்காக வாங்கிய கடன் தொகை சுமார் 5 லட்சம் ரூபாய் ஆகும். இந்த கடன் தொகையை அடைக்க முடியாமல் மனமுடைந்ததால், செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் சோளிங்கர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.