ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் எமரால்டு நகர் பகுதியில் இளைஞர்கள் போதைப்பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிப்காட் போலீசார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சிப்காட் எமரால்டு நகரை சேர்ந்த குமார் (24), ராஜாபிரபு (31), பூபதி (22), வானாபாடி நவீன் (20) ஆகியோர் கஞ்சா பாக்கெட்டுகளுடன் பிடிபட்டனர்.


அவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், வாலிபர்களை கைது செய்து, சிப்காட் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப்பொருள் விற்பனையால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.