மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

ராஜஸ்தான் மாநிலம், சகாரா கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் ஜாட் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு திருப்பூர் குமரன் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, ஆற்காடு பஸ் ஸ்டாண்ட் அருகே தள்ளு வண்டியில் ஐஸ்கிரீம் மற்றும் பாதாம் பால் விற்பனை செய்து வந்தார்.

அவரது மகன் ரத்தன்லால் ஜாட் (22) வீட்டில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் இயந்திரத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பதும், கடைக்கு அனுப்பும் பணியையும் மேற்கொண்டு வந்தார்.

நேற்று காலை வீட்டில் உள்ள ஐஸ்கிரீம் இயந்திரத்தின் மூலமாக ஐஸ்கிரீம் தயாரித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து உயிரிழந்தார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஸ்கிரீம் இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டதால்தான் ரத்தன்லால் ஜாட் மீது மின்சாரம் பாய்ந்திருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இந்த விபத்து ஐஸ்கிரீம் விற்பனையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.