பெங்களூருவை சேர்ந்த சந்தோஷ் தனது குடும்பத்துடன், கோவிலுக்கு சென்றுவிட்டு வேலூர் நோக்கி காரில் சென்றார். ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துகுள்ளானது.

இதில் சந்தோஷ் மனைவி சவிதா (41), மகள் சம்யுக்தா (6) ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று சவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சந்தோஷ் மற்றும் சம்யுக்தாவின் நிலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.