ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்த உத்தரவு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

இந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், மின்சார கம்பிகளை தொடுவதை தவிர்க்கவும், கால்நடைகளை கட்டி வைக்கவும், பழைய வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் செல்லாமல் இருப்பது நல்லது. மழைநீர் தேங்கும் பகுதிகளில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களை கவனமாக பார்த்துக்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.