சோளிங்கர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் வினோத் (40). கூலி தொழிலாளி. இவர் சோளிங்கர் ஏரிக்கரை பாலம் அருகே நின்று கொண்டு இயற்கை உபாதையை கழித்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது.
இதனால் பாலத்தின் கீழே விழுந்து படுகாய மடைந்தார். உடன் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். வினோத்தை மீட்டு 'சோளிங்கர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரி சோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சோளிங்கர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இறந்த வினோத்துக்கு அபிராமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.