ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கில் இன்று (20-12-23) தங்க நாற்கர சாலை விரிவாக்கத்திற்காகவும், மேம்பாலம் அமைப்பதற்காகவும் சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. இந்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், சாலை ஓரத்தில் இருந்த தட்சிணாமூர்த்தி (60) என்பவரின் வீட்டு சுவரை இடிக்கத் தொடங்கினர். அப்போது, எதிர்பாராதவிதமாக சுவர் அவர் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த இரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தட்சிணாமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.