ராணிப்பேட்டை சிப்காட் பேஸ் 3 முகுந்தராயபுரம் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (2023 டிசம்பர் 30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, சிப்காட் பேஸ் 3 தொழிற் பேட்டை, லாலாபேட்டை, தக்காம்பாளையம், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், அம்மூர், வேலம், கல்மேல்குப்பம், கிருஷ்ணாவரம் மற்றும் அதனை சார்ந்த சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இந்த பணிகள் முடிந்த பின்னர் மின் விநியோகம் வழக்கம்போல் இருக்கும்.

மின்விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படாமல் இருக்க, முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.