ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அன்வர்திகான்பேட்டையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (2) வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அந்த வழியாக வந்த வாலிபர் தான் ஓட்டி வந்த பைக்கை தமிழ்ச்செல்வன் மீது மோதிவிட்டு தப்பி சென்றார்.

இதில், தமிழ்ச்செல்வன் படுகாயமடைந்தான். அக்கம்பக்கத்தினர் தமிழ்ச்செல்வனை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவன் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்ச்செல்வனுக்கு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.