ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (16-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.
ராணிப்பேட்டை நகரம், வாலாஜா, ஒழுகூர், சிப்காட் துணைமின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த தடை ஏற்படுகிறது.
இந்த தடையால், ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதிநகர், பெரியாநகர், சிப்காட், சிட்கோ, பெல், புளியந்தாங்கல், அண்ணாநகர், அக்ராவரம், வானாபாடி, செட்டித்தாங்கல், தண்டலம், அம்மூர், வேலம், எடப்பாளையம், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வி.சி. மோட்டூர், வன்னிவேடு, அம்மனந்தாங்கல், பெல்லியாப்பா நகர், டி.கே.தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, சாத்தம்பாக்கம்,
அனந்தலை, வளவனூர், எசையனூர், அனந்தாங்கல், ஒழுகூர், வாங்கூர், கரடிகுப்பம், ஜி.சி.குப்பம், தலங்கை, செங்காடு, செங்காடு மோட்டார் மற்றும் அதனை சார்ந்த சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின் வாரியம் இந்த தடையால் ஏற்படும் அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.