சோளிங்கர் மற்றும் மேல்வெங்கடாபுரம் துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் நாளை (2023 டிசம்பர் 30) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிக்கும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அதன்படி, சோளிங்கர், எரும்பி, தாடூர், கல்பட்டு, தாளிக்கால், போளிப்பாக்கம், பழையபாளையம், தப்பூர், பாண்டியநல்லூர், கீழ்பாலாபுரம், பாணாவரம், சோமசுந்தரம், கரிக்கல், மேல்வெங்கடாபுரம், ஜம்புகுளம், கொடைக்கல், சூரை, தலங்கை, ஆயல், மருதாலம், பொன்னை, ஒட்டனேரி, கீரைசாத்து, மிளகாய்குப்பம், எஸ்.என் பாளையம், கே.என் பாளையம், பொன்னை, புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இந்த பணிகள் முடிந்த பின்னர் மின் விநியோகம் வழக்கம்போல் இருக்கும்.

மின்விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படாமல் இருக்க, முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.