காவேரிப்பாக்கம், டிசம்பர் 20, 2023
காவேரிப்பாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை, டிசம்பர் 21 அன்று பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.

இதனை முன்னிட்டு, காவேரிப்பாக்கம், திருப்பாற்கடல், அத்திப்பட்டு, உதயம் நகர், ஜெசிகே நகர், கொண்டாபுரம், சுமைதாங்கி, கடப்பேரி, ராமாபுரம், பாகவெளி, பூண்டி, சாத்தம்பாக்கம், சக்கரமல்லூர், வேகாமங்கலம், மாமண்டூர், பன்னியூர், பொன்னப்பன் தாங்கல், உப்பரன்தாங்கல், சேரிஅய்யம்பேட்டை, கட்டளை, மகானிபட்டு, துரைபெரும்பாக்கம், பெரியகிராமம் ஆகிய கிராமங்களில் நாளை, டிசம்பர் 21 அன்று காலை 9 மணியில் இருந்து மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த மின் நிறுத்தத்தால் பாதிக்கப்படக்கூடிய பொதுமக்கள் தங்கள் தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.