ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த முள்ளுவாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆற்காடு செய்யாறு சாலையில் அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட இருந்தது. இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடையை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக தகவல் அறிந்த மதுபிரியர்கள் மது வாங்குவதற்காக அங்கு குவிந்தனர். இதனால் அவர்களுக்கும். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் சமரசம் அடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் மதுக்கடையின் முன்பு அமர்ந்து மதுக்கடையை இப்பகுதியில் திறக்கக்கூடாது என ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர், வார்டு உறுப்பினர்கள் உட்பட கிராம பொது மக்களின் முன்னிலையில் முடிவு செய்தனர்.