முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட 100 சீன இணையதளங்களை மத்திய அரசு தடை செய்யும்

இந்தியர்களைக் குறிவைத்து முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட 100 சீன இணையதளங்களை மத்திய அரசு தடை செய்ய உள்ளது. இந்த இணையதளங்கள் முதலீடு, அதிக லாபம் என்ற பெயரில் இந்திய மக்களை மோசடி வலையில் சிக்க வைக்கும் பணிகளைச் செய்து வருவதாகத் தெரிகிறது.

சீன நிறுவனங்களாலும், சீனாவுக்குத் தொடர்புடைய நபர்களாலும் நடத்தப்படும் நிதி மோசடிக்கு எதிரான மத்திய அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் சீன இணையதளங்களை முடக்க வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் மொபைல் ஆப் மூலம் கடன் கொடுத்து மக்களை மிரட்டி பணம் பறிப்பதில் துவங்கி, கிரிப்டோகரன்சி முதலீட்டில் அதிக லாபம், போலியான முதலீட்டுத் தளம் வரையில் பல போலியான முதலீட்டுத் தளத்திற்குப் பின்னால் ஒரு சீன நிறுவனமோ அல்லது ஒரு சீன நபரோ இருப்பது பல மோசடிகளில் அம்பலமானது.

முதலீடு என்ற பெயரில் மோசடி செய்யும் பல இணையத் தளங்கள், கடன் செயலிகள் என இந்திய மக்களின் பணத்தைப் பறிக்கும் கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்கவும் இத்தகைய செயலிகள் இணையதளங்களை முடக்கவும் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருவது மட்டும் அல்லாமல், மக்கள் இத்தகைய மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனப் பல வகையில் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

சீனா மோசடியாளர்களை ஓடுக்க மத்திய நிதியமைச்சகம், ஆர்பிஐ ஏற்கனவே பல நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக இது பதிவு செய்யப்படாத நிறுவனம், பதிவு செய்யப்பட்ட மொபைல் ஆப் ஆகியவற்றின் மூலம் நடக்கும் காரணத்தால் கட்டுப்படுத்துவது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

இந்த நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் போலி மோசடிகள் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட சீன இணையதளங்களை முடக்க வலியுறுத்தியுள்ளது.

இந்த தடை உத்தரவு இந்திய மக்களின் பாதுகாப்பிற்கும், இந்திய பொருளாதாரத்திற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இந்த தடை உத்தரவால் இந்தியாவில் முதலீட்டு மோசடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் விழிப்புணர்வு அவசியம்

இந்திய மக்களும் இத்தகைய மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க விழிப்புணர்வு அவசியம். முதலீடு என்ற பெயரில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறும் எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு அது உண்மையானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • முதலீட்டு திட்டம் எந்த நிறுவனம் அல்லது நபர் மூலம் நடத்தப்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
  • முதலீட்டு திட்டத்தின் நிபந்தனைகள் மற்றும் கொள்கைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
  • முதலீட்டிற்கு முன்பு ஒரு நிபுணரின் ஆலோசனை பெற வேண்டும்.

இத்தகைய விழிப்புணர்வு மூலம் மக்கள் இத்தகைய மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.