ஒடுகத்தூரை அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் விவசாயி சின்ன அப்பு வளர்த்து வரும் பசு கன்றுக்குட்டி ஈன்றது. அந்த கன்றுக்குட்டிக்கு மூன்று கால்கள் மட்டுமே இருந்தன. முன்பக்கத்தில் வலது பக்கத்தில் உள்ள கால் நடக்க முடியாத வகையில் சிறிய அளவில் இருந்தது.

இதை அறிந்த பொதுமக்கள் அந்த கன்றுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். அதேபோல், பலரும் இந்த அதிசய கன்றுக்குட்டியை தங்களது செல்போனில் படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சிலர் கன்றுக்குட்டிக்கு ஆராத்தி எடுத்து, மாலை அணிவித்து வணங்கி சென்றனர். விவசாயி சின்ன அப்பு, "என் பசுவுக்கு இது மூன்றாவது முறையாக கன்று போட்டது. முதல் இரண்டு முறையும் நல்லபடியாகத்தான் கன்றுகள் பிறந்தன. இந்த முறை மூன்று கால்களுடன் கன்று பிறந்தது. இது ஒரு அதிசயம் என்று நினைக்கிறேன். இந்த கன்றுக்குட்டி நன்றாக வளர்ந்து, நல்லபடியாக வாழ்க என்று பிரார்த்தனை செய்கிறேன்" என்றார்.