ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்த மிருதங்க கலைஞர் லோகநாதன் என்பவருக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி தனது சொந்த செலவில் மிருதங்கத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளர் சிவஞானம் உடன் இருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி பேசுகையில், "மிருதங்கம் ஒரு சிறந்த இசைக்கருவி. இந்த கலைஞர் மிருதங்கத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளார். அவரது திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், இன்று அவருக்கு மிருதங்கத்தை அன்பளிப்பாக வழங்குகிறேன். மேலும், அவரது கலைத்துறையில் சிறந்து விளங்க அரசு சார்பில் உதவிகளை வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
கலைஞர் லோகநாதன் பேசுகையில், "இந்த அன்பளிப்பால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மிருதங்கத்தைப் பயன்படுத்தி மேலும் சிறந்த இசை நிகழ்ச்சிகளை வழங்க முயற்சிப்பேன்" என்று தெரிவித்தார்.