ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள முள்ளுவாடி கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. அந்த கடை திடீரென மூடப்பட்டதால், அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த கிராமத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், டூவீலர்களுக்கு பெட்ரோல் நிறைய போட வேண்டியிருக்கிறது. கூடுதல் செலவும் ஏற்படுகிறது.

இதனால், அந்த கிராமத்தில் கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு மது வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட, மது பிரியர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து ராணிப்பேட்டை கலெக்டர் ஆபீசுக்கு திரண்டு சென்று, மீண்டும் ஒரு டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.