ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பின்படி மிக்ஜாம் புயல் மழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 04. 12. 2023 திங்கட்கிழமை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடுமுறை உத்தரவு பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும்.
மேலும், தங்களது குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள ஆட்சியர் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள்
- தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்.
- தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அருகில் உள்ள அரசின் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
- பொதுமக்கள் தங்களின் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க வேண்டும்.
- மலையின் போது மரங்களுக்கு கீழே நிற்க வேண்டாம்.
- குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்.
- அத்தியாவசிய உணவுப் பொருள்களை தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த அறிவுறுத்தல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.