ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த மகேந்திரவாடி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்து நடந்தது. காட்பாடியில் இருந்து ரேணிகுண்டா வழியாக ஆந்திரா செல்லும் சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், ரயில்வே பாதை சேதமடைந்ததால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றி, ரயில் போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.