சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பெருங்களத்தூரில் நடுரோட்டில் முதலை ஒன்று உலா வந்தது.
பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகே இந்த முதலை ஒன்று உலா வந்தது. அந்த வழியாக வந்த ஸ்விக்கி ஊழியர் ஒருவர் முதலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலை எங்கிருந்து வந்தது என்பது குறித்து தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்..