வேப்பூர்: இலவச வீடு கேட்டு சாலை மறியல்
ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(33). இவர் அரசின் இலவச வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தின் கீழ் வீடு கேட்டு ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளார். ஆனால் வீடு கட்டிக்கொடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் வேப்பூர் மெயின்ரோட்டில் தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள், "எங்களுக்கு இலவச வீடு கட்டிக் கொடுக்காத அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபடுகிறோம். எங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தால் மட்டுமே சாலை மறியலைக் கைவிடுவோம்" என்று கோஷம் எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில், சதீஷ்குமாருக்கு விரைவில் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் போராட்டக்காரர்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.