சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாளை (டிசம்பர் 4) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக பொது விடுமுறை அளித்துள்ளது.
இதன்படி, நாளை மேற்கண்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும், தேவைப்பட்டால் மட்டும் வெளியே செல்லும்போது பாதுகாப்பாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.