வாலாஜாபேட்டை அடுத்த மேல் சிண்டிகேட் கிராமத்தை சேர்ந்த மாமல்லன் (32) என்பவர், காஷ்மீர் பகுதியில் ராணுவத்தில் வேலை செய்து வந்தார். 10 நாள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து செல்ல இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், வீட்டில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மாமல்லன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வாலாஜாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது ஒரு தீர்வு அல்ல. எந்த பிரச்சனைக்கும் பேசி தீர்க்கலாம். தற்கொலை செய்து கொள்வதற்கு முன், உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது மனநல ஆலோசகர்களை அணுகவும்.