ராணிப்பேட்டை, மேல்விஷாரம் பைபாஸ் சாலையில் வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த மினிவேன் சாலையில் கடக்க முயன்ற பசுமாட்டின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மினிவேனில் பயணித்த இருவருக்கு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.