திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியை சேர்ந்த சந்துரு (23) மற்றும் வந்தவாசியை சேர்ந்த சாந்தி (52) ஆகியோர், தனது குடும்பத்தினருடன் அரக்கோணம் ரயில் நிலையம் வந்தனர். அங்கிருந்து ஆந்திர மாநிலம் புத்துருக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது, திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த ரயில் மோதியதில், சந்துரு மற்றும் சாந்தி இருவரும் உடல் துண்டு துண்டாக சிதறி பலியாகினர்.

இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.