ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண்கள் வேளாண்மை நிலங்கள் வாங்குவதற்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஒரு பெண்ணுக்கு ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு பெண்கள் ரூ.5 லட்சம் மானியம் பெற்று நிலங்களை வாங்கினர். இந்த நிலப்பத்திரங்களை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், துணை கலெக்டர்கள் ஸ்ரீவள்ளி, வரதராஜ், சத்தியபிரசாத், முரளி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி, தாட்கோ மேலாளர் அமுதராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.