ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி பெரிய தெருவை சேர்ந்த கீதா (49), நேற்று 100 நாள் வேலை திட்டத்தில் எடப்பாளையம் மலைப்பகுதியில் தொழிலாளர்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று, கீதாவின் கட்டை விரலில் கடித்துவிட்டது.

இதனால் கீதாவுக்கு வலது கை கட்டை விரலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டது. இதைப் பார்த்த மற்றவர்கள் உடனடியாக கீதாவை மீட்டு ஆட்டோவில் ஏற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கீதாவுக்கு சிதிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.