ராணிப்பேட்டை உட்கோட்டை காவல்துறையினர், வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, எம் பி டி ரோடு அரசு மருத்துவமனை மெயின் ரோடு பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த புருஷோத்தமன் (23) என்பவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தார்.

போலீசார் அவரை மடக்கிப் பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது, அவர் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது.

அவரிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. அவர் வாலாஜா குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.